கம்ப்யூட்டர் வசதி கொண்டவர்களில் பலரும் இந்திய வானிலை இலாகாவின் வலைத் தளத்துக்குச் சென்று கல்பனா செயற்கைக்கோள் அவ்வப்போது அனுப்பிய படங்களைப் பார்த்து புயல் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டிருப்பர். ஆனால் அவர்களும் சரி, புயல் சுழலும் பாணியை உன்னிப்பாகக் கவனிக்கத் தவறியிருக்கலாம்.
![]() |
1. வலமிருந்து இடம் 2. இடமிருந்து வலம் |
வங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள அனைத்துமே வலப்புறத்திலிருந்து இடப்புறமாக சுழல்வதாக (Anti Clockwise) இருக்கும்.
![]() |
வலமிருந்து இடமாகச் சுழலும் வட கோளார்த்தப் புயல் |
சொல்லி வைத்தாற் போல இந்த அத்தனை புயல்களும் வலமிருந்து இடமாகத் தான் சுழலும். பூமியின் நடுக்கோட்டுக்கு(Equator) வடக்கே எந்தப் புயலும் இப்படியாகத் தான் சுழலும்.
![]() |
டிசம்பர் 2011, "தானே”(Thane) புயல். வலமிருந்து இடமாகச் சுழல்கிறது. நன்றி: IMD |
![]() |
இடமிருந்து வலமாகச் சுழலும் தென் கோளார்த்தப் புயல் |
![]() |
குஸ்டாவ் கொரியாலிஸ் |
பூமியானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல்கிறது. ஆகவே வட கோளார்த்தத்தில் புயல் உருவாகி மேகக் கூட்டங்கள் சுழல ஆரம்பிக்கும் போது வட திசையிலிருந்து தெற்கு நோக்கி வீசும் காற்றும் அத்துடன் மேகங்களும் பூமி சுழலும் திசையை நோக்கி அதாவது வலப் புறமாக சற்று திருப்பப்படுகின்றன. ஆகவே அவை வலப்புறத்திலிருந்து இடப்புறமாகச் சுழல ஆரம்பிக்கின்றன.
தென் கோளார்த்ததில் இதற்கு நேர் மாறான விளைவு ஏற்பட்டு புயல் மேகங்கள் இடமிருந்து வலப்புறமாகச் சுழல முற்படுகின்றன.
கொரியாலிஸ் விளைவு புயல்கள் சுழலும் பாணியை மட்டுமன்றி பீரங்கிக் குண்டுகள் செல்லும் பாதையிலும் விளைவை உண்டாக்குகின்றன. தரைப் படை மற்றும் போர்க்கப்பல்களில் உள்ள பீரங்கிகளின் குண்டுகள் பல கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியவை.
பூமியின் வட கோளார்த்தத்தில் வடக்கு நோக்கி பீரங்கிக் குண்டுகளைச் செலுத்தும் போது கொரியாலிஸ் விளைவு காரணமாக சற்றே வலப்புறம் விலகும். ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தும் போது இதனை மனதில் கொண்டு குண்டுகளைச் செலுத்துவர். அப்போது தான் அவை இலக்கை சரியாகத் தாக்கும்.
ஆனால் முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் படைக்கும் ஜெர்மன் படைக்கும் பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே கடற் போர் நடந்தது. போரின் ஆரம்பக் கட்டத்தில் பிரிட்டிஷ் கடற் படையின் பீரங்கிக் குண்டுகள் மிகவும் தள்ளிப் போய் விழுந்தன. அவர்கள் கொரியாலிஸ் விளைவை (வட கோளார்த்தத்தில் ஏற்படுகின்ற விளைவை) மனதில் கொண்டு அத்ற்கேற்பத் தாக்கினர். ஆனால் தென் கோளார்த்தத்தில் பீரங்கிக் குண்டுகள் இடது புறம் விலகும் என்பதை உணரவில்லை. இதை உணர்ந்த பின்னர் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை.
0 comments:
Post a Comment