கேரள மாநிலம் அய்யப்பன் கோயில் தொடர்பான சில பிரச்சினைகள் - நியாயமாக மக்கள் - பக்தர்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
1)
மகரஜோதி என்பது பற்றிய முதல் பிரச்சினை; மகரஜோதி என்பது அய்யப்பன்
சக்தியால் உருவாவது அல்ல; அது திட்டமிட்ட வகையில் மக்களை ஏமாற்றிட, மோசடி
செய்ய செயற்கையாக மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்பது சந்தேகத்திற்கு
இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு விட்டது.
தேவசம்
போர்டும் ஒப்புக் கொண்டு விட்டது. சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை
அமைச்சரும் ஒப்புக் கொண்டு விட்டார். இன்னும் சொல்ல வேண்டுமானால், கேரள
மாநில முதல் அமைச்சராகவிருந்த ஈ.கே. நாயனார் அவர்களே இந்தியப்
பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவராகவிருந்த ஜோசப் எடமருகுவிடம் ஒப்புக்
கொண்டு விட்டார்.
மதத்தின்
கோட்பாடு நாணயமுடையதாக, நேர்மை உடையதாக இருக்குமானால், மகர ஜோதிப்
பித்தலாட்டத்தை நிறுத்திக் கொண் டிருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
மோசடி என்று மிக வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, அந்த மோசடி தொடர
அனுமதிக்கப்படுவது எப்படி?
மதத்தின்
பெயரால் எந்த மோசடியையும் செய்யலாம் என்று சட்டம் ஏதாவது நாட்டில்
இருக்கிறதா? இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள
நிலையில், உண்மையின் அடிப்படையில் மகர ஜோதியைத் தடை செய்ய ஆணை
பிறப்பிக்காதது ஏன்? பக்தர்களாவது உண்மை தெரிந்த நிலையில் மகர ஜோதியைத்
தரிசனம் செய்வது என்ற பெயரால் செல்லுவது எத்தகைய அறிவீனம்! பக்தி வந்தால்
புத்தி போய் விடும் என்று தந்தை பெரியார் சொன்னதற்கு இந்த எடுத்துக்காட்டு
ஒன்று போதாதா?
இரண்டாவதாக
தேவபிரசன்னம் பற்றிய பிரச்சினை. சபரிமலை அய்யப்பன் கோயிலில் 2006ஆம்
ஆண்டு ஜூலை மாதம் சோதிடர் உன்னிக்கிருஷ்ணன் பணிக்கர் தலைமையில் 21
சோதிடர்கள் தேவபிரசன்னம் மேற்கொண்டனர். பெண் ஒருவர் அய்யப்பன்
திருமேனியைத் தீண்டியதாகவும், அதன் காரணமாக அய்யப்பன் மிகவும் கோபமாக
இருப்பதாகவும் தேவ பிரசன்னத்தின் வாயிலாகக் கூறப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நடிகை ஜெயமாலா அய்யப்பன் திருமேனியைத் தொட்டது நான்தான் என்று தானாகவே முன்வந்து கூறினார்.
இதனால்
பெரும் சர்ச்சை வெடித்துக் கிளம்பியது. அய்யப்பன் கோயில் தந்திரிகள்
வழக்கொன்றைத் தொடர்ந்தனர். அந்த வழக்கு இப்பொழுது தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது.
இதிலும்
பொது மக்களும் பக்தர்களும் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். பெண் என்றால்
சக்தியின் வடிவம் என்று சொல்கிறார்களே, அப்படி இருக்கும்போது ஆண்
பக்தர்கள் அய்யப்பன் திருமேனியைத் தீண்டலாம், பெண் மட்டும் தீண்டக் கூடாது
என்றால் இதில் என்ன நியாயம் இருக்கிறது? இது குறித்துப் பெண்
பக்தர்களாவது சிந்திக்க வேண்டாமா? போர்க் கொடியை உயர்த்த வேண்டாமா?
இந்தச்
சம்பிரதாயங்களை எல்லாம் கடவுளா செய்தார்? அப்படி ஒருவர்தான் இல்லையே!
இந்தப் பார்ப்பனர்கள் செய்து வைத்த சூழ்ச்சி தானே! உருவம் அற்றவன் என்று
சொல்லி விட்டு, இன்னொரு பக்கத்தில் உருவத்தைச் செதுக்கி வைத்ததால்
எவ்வளவுப் பெரிய குளறுபடிகள் என்று சிந்திக்க வேண்டாமா?
உண்டியல் காணிக்கை - ரூ.731.00 கோடிவங்கி டெபாசிட் வட்டி - ரூ.405.23 கோடி
விஅய்பி டிக்கெட் வருவாய் - ரூ.165 கோடி
முடி காணிக்கை வருவாய் - ரூ.179 கோடி
பிரசாதம் விற்பனை - ரூ.135 கோடி
தங்கும் அறைகள் வருவாய் - ரூ.69 கோடி
ஆர்ஜித டிக்கெட் வருவாய் - ரூ.43 கோடி
தங்க டாலர் விற்பனை - ரூ.17 கோடி
ஓட்டல், கடைகள், மொட்டை கட்டணம் - ரூ.90.47 கோடி
திருமணத்துக்காக குபேரனிடம் ஆலோசனை நடத்தி பதில் தேவஸ்தானம் தகவல்
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சீனிவாசராவ் கூறுகை யில், ஏழுமலையான் தனது திருமணத் துக்காக வாங்கிய கடன் எவ்வளவு என்பது உள்ளிட்ட கேள்விகள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. வந்தால், அறங்காவலர் குழு நிர்வாகிகள், ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பதில் அளிக்கப் படும் என்றார்.
திருமலை திருப்பதி தேவஸ் தான மக்கள் தொடர்பு அலுவலர் ரவி கூறுகையில், இது மதம் தொடர்பான பிரச்சினை. இந்த மாதிரி கேள்விகள் கேட்பது பைத்தியக்காரத்தனம் என்றார்.
புராணக் கதைகள்
திருப்பாற்கடலில் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டு கொள்ளாமல் அவமதித்த தாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார்.
அடி வாங்கியும் அமைதி யான விஷ் ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட் சுமிக்கு வந்ததே கோபம். எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத் தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத் தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட் டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.
காதல் மலர்ந்தது எப்படி?
மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே சிறீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாச ராஜன், பல கோடிக்கு சீதனம் தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார். (இவையெல்லாம் புராணக் கதைகள்)
கடன் பட்டது எப்படி?
உடனே சிறீநிவாசனான மஹா விஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.
வட்டி கட்டுவது எப்படி?
அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாக வும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதி யாகவும் பெறுவது என்று ஏழுமலை யான் முடிவு செய்தார்.
குபேரனுக்கு போகுமா?
குபேரனுக்கு கொடுப்பதற்காக காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்காக திருமலையில் அன்னதானம் முதலான பல வசதிகள் செய்து தருவதும், பக்தர்கள் தரிசித்து மகிழ பலவாறாக பெரு மாளுக்கு அலங்காரம் செய்வதும், இந் தியா முழுவதும் பல தர்ம காரியங்களை நடத்துவதுமாக (குபேரனுக்கு) போய்ச் சேருகிறது என்றும் சொல்லலாம். இப்படியெல்லாம் கதை.
மதம் சம்பந்தமான பிரச்சினையில் இப்படியெல்லாம் கேள்வி கேட்பது பைத்தியக்காரத்தனம் என்கிறார் கோயில் மேலாளர். இந்தப் பைத்தியக்காரத்தனத் தின் அடிப்படையில் கோயில் கட்ட லாமா? உண்டியல் வசூல் செய்யலாமா? இதனை எந்தப் பைத்தியக்காரத்தனப்
0 comments:
Post a Comment