பூமியின் உச்சிப் பகுதியை வட துருவம் என்று கூறுகிறோம். அடிப்பகுதியை தென்
துருவம் என்கிறோம். இந்த இரண்டையும் பூகோள துருவங்கள் என்று
குறிப்பிடுகிறார்கள். அப்படிச் சொல்லக் காரணம் உண்டு. ஏனெனில் பூமிக்கு
வேறு இரு துருவங்களும் உள்ளன. அவை காந்த துருவங்களாகும்.
காந்த ஊசியைத் தொங்கவிட்டால் அதன் ஒரு முனை வட திசையைக் காட்டும். அது காட்டுவது வட காந்த துருவத்தையாகும். பூகோள வட துருவத்தை அல்ல.
சூரியனுக்கும் இப்படி வட காந்த துருவம், தென் காந்த துருவம் உள்ளன. அடுத்த சில மாதங்களில் சூரியனின் வட காந்த துருவம் தென் காந்த துருவ்மாக மாறி விடும் என்றும் தென் காந்த துருவம் வட காந்த துருவமாக மாறி விடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது அதிசயம் இல்லை என்றும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நிகழ்ந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இப்படி காந்த துருவ மாற்றம் (Reversal of Magnetic Poles) நிகழும் போது சூரியனின் இயற்கையான “பூகோள் “ துருவங்கள் இடம் மாறுவதில்லை. அதாவது சிரஸாசனம் மாதிரியில் சூரியனின் “தலை’பகுதி கீழ் நோக்கி மாறி விடுவதில்லை. சூரியனின் உட்புற்த்தில் உள்ள காந்த துருவங்கள் மட்டுமே மாறுகின்றன.இது எப்போது நிகழ்கிறது?
சூரியனின் முகத்தில் அவ்வப்போது கரும் புள்ளிகள் (Sun Spots) தோன்றுவது உண்டு.சூரியனில் வெப்பம் சற்றே குறைவாக உள்ள இடங்களே நமக்கு கரும் புள்ளிகள் போலக் காட்சி அளிக்கின்றன. ஒரு கரும் புள்ளிக்குள் பூமியை இறக்கலாம். அந்த அளவுக்கு அது பெரியது.
சூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதும் ஒரு கால ஒழுங்குக்கு உட்பட்டு நிகழ்கிறது.2009 ஆம் ஆண்டில் சூரியனில் அனேகமாகக் கரும் புள்ளிகளே காணப்படவில்லை. பின்னர் கரும் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் 2014 ஆம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டில் இது உச்ச அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிறகு அடுத்த சுமார் ஐந்தரை ஆண்டுகளில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை
படிப்படியாகக் குறைய ஆரம்பித்து கரும் புள்ளிகளே இல்லாமல் போய்விடும்.
இந்தக் கணக்குப்படி 2020 ஆம் ஆண்டில் சூரியனில் கரும் புள்ளிகளே இராது.
கரும் புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்டுவதும் இதே போல 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இதன்படி2025 ஆம் ஆண்டில் அது உச்ச அளவை எட்டும்.
சூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக இருக்கின்ற கட்டத்தில்
தான் சூரியனில் துருவ மாற்றம் நிகழ்கிறது. அனேகமாக இன்னும் மூன்று அல்லது
நான்கு மாதங்களில் இது நிகழலாம் என்று அமெரிக்க ஸ்டான்போர்ட்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தோடா ஹோக்சிமா கூறியுள்ளார். அவர் சூரிய
ஆராய்ச்சி நிபுணர்.
சூரியனின் துருவ மாற்றம், சூரியனின் காந்தப் புலம் பற்றி ஆராய்வதற்கென தனி ஆராய்ச்சிக்கூடம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வருகிறது. ஹோக்சிமா அந்த ஆராய்ச்சிக்கூடத்தைச் சேர்ந்தவர்.
சூரியனுக்கு காந்த துருவங்கள் உண்டு என்பதால் சூரியனுக்கு காந்தப் புலமும் உண்டு. இந்த காந்தப் புலம் சூரிய மண்டலம் முழுவதும் வியாபித்துள்ளது. இக்காந்தப் புலமானது வலுவிழந்து கொண்டே போய் பூஜ்ய நிலைக்கு வரும் போது சூரியனில் துருவ மாற்றம் நிகழ்கிறது.
சூரியனின் காந்தப் புலமானது அண்டவெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள்
பூமி போன்று உள் வட்ட கிரகங்களைக் கடுமையாகத் தாக்காமல் பாதுகாக்கிறது.
சூரியனுக்கு உள்ளது போலவே பூமிக்கும் காந்தத் துருவங்கள் உள்ளன. பூமிக்கும் காந்தப் புலம் உள்ளது.அப்படியானால் சூரியனின் காந்த துருவங்கள் மாறுவது போல பூமியிலும் நிகழுமா என்று கேட்கலாம். அவ்விதம் நிகழத்தான் செய்கிறது. ஆனால் பூமியின் காந்தத் துருவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மாறுகின்றன.
பூமியில் அவ்விதம் காந்த துருவங்கள் மாறினால் பூமியில் உயிரினத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கதை கிளப்புபவர்கள் உண்டு. ஆனால் காந்த துருவ மாற்றத்தால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பூமியின் மையத்தில் இரும்பு- நிக்கல் உலோகக் குழம்பு உள்ளது. இதில் சுழல்கள் உண்டு. இதுவே பூமிக்குக் காந்தப்புலத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது. பூமியைச் சுற்றி அமைந்த காந்தப்புலமானது சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் (Solar Wind) த்ரைக்கு வந்து சேராமல் தடுக்கின்றன.இதன் பலனாக பூமியில் உயிரினம் காக்கப்படுகிறது
காந்த ஊசியைத் தொங்கவிட்டால் அதன் ஒரு முனை வட திசையைக் காட்டும். அது காட்டுவது வட காந்த துருவத்தையாகும். பூகோள வட துருவத்தை அல்ல.
சூரியனுக்கும் இப்படி வட காந்த துருவம், தென் காந்த துருவம் உள்ளன. அடுத்த சில மாதங்களில் சூரியனின் வட காந்த துருவம் தென் காந்த துருவ்மாக மாறி விடும் என்றும் தென் காந்த துருவம் வட காந்த துருவமாக மாறி விடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது அதிசயம் இல்லை என்றும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நிகழ்ந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இப்படி காந்த துருவ மாற்றம் (Reversal of Magnetic Poles) நிகழும் போது சூரியனின் இயற்கையான “பூகோள் “ துருவங்கள் இடம் மாறுவதில்லை. அதாவது சிரஸாசனம் மாதிரியில் சூரியனின் “தலை’பகுதி கீழ் நோக்கி மாறி விடுவதில்லை. சூரியனின் உட்புற்த்தில் உள்ள காந்த துருவங்கள் மட்டுமே மாறுகின்றன.இது எப்போது நிகழ்கிறது?
சூரியனின் முகத்தில் அவ்வப்போது கரும் புள்ளிகள் (Sun Spots) தோன்றுவது உண்டு.சூரியனில் வெப்பம் சற்றே குறைவாக உள்ள இடங்களே நமக்கு கரும் புள்ளிகள் போலக் காட்சி அளிக்கின்றன. ஒரு கரும் புள்ளிக்குள் பூமியை இறக்கலாம். அந்த அளவுக்கு அது பெரியது.
சூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதும் ஒரு கால ஒழுங்குக்கு உட்பட்டு நிகழ்கிறது.2009 ஆம் ஆண்டில் சூரியனில் அனேகமாகக் கரும் புள்ளிகளே காணப்படவில்லை. பின்னர் கரும் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் 2014 ஆம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டில் இது உச்ச அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]() |
சூரியனில் கரும் புள்ளிகள் |
கரும் புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்டுவதும் இதே போல 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இதன்படி2025 ஆம் ஆண்டில் அது உச்ச அளவை எட்டும்.
![]() |
சூரியனின் வட காந்த தென் காந்த துருவங்கள்.படத்தில் சூரியனின் காந்தப் புலத்தையும் காணலாம் |
சூரியனின் துருவ மாற்றம், சூரியனின் காந்தப் புலம் பற்றி ஆராய்வதற்கென தனி ஆராய்ச்சிக்கூடம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வருகிறது. ஹோக்சிமா அந்த ஆராய்ச்சிக்கூடத்தைச் சேர்ந்தவர்.
சூரியனுக்கு காந்த துருவங்கள் உண்டு என்பதால் சூரியனுக்கு காந்தப் புலமும் உண்டு. இந்த காந்தப் புலம் சூரிய மண்டலம் முழுவதும் வியாபித்துள்ளது. இக்காந்தப் புலமானது வலுவிழந்து கொண்டே போய் பூஜ்ய நிலைக்கு வரும் போது சூரியனில் துருவ மாற்றம் நிகழ்கிறது.
![]() |
சூரியனில் காந்த துருவங்கள் மாறி அமைந்துள்ளதைக் கவனிக்கவும் |
சூரியனுக்கு உள்ளது போலவே பூமிக்கும் காந்தத் துருவங்கள் உள்ளன. பூமிக்கும் காந்தப் புலம் உள்ளது.அப்படியானால் சூரியனின் காந்த துருவங்கள் மாறுவது போல பூமியிலும் நிகழுமா என்று கேட்கலாம். அவ்விதம் நிகழத்தான் செய்கிறது. ஆனால் பூமியின் காந்தத் துருவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மாறுகின்றன.
பூமியில் அவ்விதம் காந்த துருவங்கள் மாறினால் பூமியில் உயிரினத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கதை கிளப்புபவர்கள் உண்டு. ஆனால் காந்த துருவ மாற்றத்தால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பூமியின் மையத்தில் இரும்பு- நிக்கல் உலோகக் குழம்பு உள்ளது. இதில் சுழல்கள் உண்டு. இதுவே பூமிக்குக் காந்தப்புலத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது. பூமியைச் சுற்றி அமைந்த காந்தப்புலமானது சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் (Solar Wind) த்ரைக்கு வந்து சேராமல் தடுக்கின்றன.இதன் பலனாக பூமியில் உயிரினம் காக்கப்படுகிறது
0 comments:
Post a Comment