Software எதுவும் இல்லாமல் CD/DVD Burn செய்வது எப்படி?

என்ன தான் Pen Drive, Memory Card என்று வந்துவிட்ட போதிலும் இன்னும் நம்மில் பலர் CD, DVD – களை பயன்படுத்தி வருகிறோம். சில சமயங்களில் அவசரமாக CD அல்லது DVD ஒன்றை Burn செய்ய வேண்டி இருக்கும். ஆனால் நம்மிடம் எந்த மென்பொருளும் இருக்காது. அவ்வாறான சமயங்களில் எப்படி மென்பொருள் இல்லாமல் Burn செய்வது என்று பார்ப்போம். 

Windows 7, Vista:

1. DVD or CD – ஐ கணினியில் Insert செய்து விடுங்கள். 
2. உங்கள் My Computer பகுதியில் உள்ள CD Drive ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 
3. இப்போது நீங்கள் எந்த File – களை Burn செய்ய வேண்டுமோ அவற்றை Cd Drive – இல் Drag செய்து விடவும். 
4. இப்போது கீழே படத்தில் உள்ளது போல இடது பக்க மெனுவில் உள்ள படி ரைட் கிளிக் செய்து “Burn to Disc” என்பதை கொடுங்கள். 
5. இப்போது Next என்பதை கிளிக் செய்து Burn செய்ய ஆரம்பியுங்கள். 
6. CD or DVD க்கு உங்கள் பெயர் கொடுக்க வேண்டும் என்றால், Burn செய்யும் முன்பே Rename செய்து விடவும். 

Windows XP:

1. DVD or CD – ஐ கணினியில் Insert செய்து விடுங்கள்.
2. உங்கள் My Computer பகுதியில் உள்ள CD Drive ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
3. இப்போது நீங்கள் எந்த File – களை Burn செய்ய வேண்டுமோ அவற்றை Cd Drive – இல் Drag செய்து விடவும்.
4. இப்போது இடது பக்கம் வரும் “Write these files to CD” என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது CD Writing Wizard பகுதிக்கு வருவீர்கள். அதில் Disc பெயர் கொடுக்கவும். அடுத்து Next கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்.


Remote Desktop Connection என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி? 

 

Team Viewer மூலம் ஒரு இடத்தில் இருக்கும் கணினியை இன்னொரு இடத்தில்  எப்படி Access செய்வது என்று பார்த்து இருந்தோம். இதே செயலை ஒரே Network-இல் இருக்கும் கணினிகளுக்கு எந்த மென்பொருளும் இல்லாமல் செய்வதற்கு உதவுவது Remote Desktop Connection. எப்படி அதை பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

இதை செய்ய Access செய்யப்போகும் கணினியில் User Name, Password, IP போன்றவை தெரிந்து இருக்க வேண்டும். 

Windows XP

1. Start Menu >>All Programs>> Accessories >> Remote Desktop Connection என்பதை ஓபன் செய்யவும். 
2. இப்போது குறிப்பிட்ட கணினியில் IP-ஐ அதில் தரவும். 
3. கொடுத்து விட்டு Connect என்பதை தரவும். இப்போது Remote Desktop ஓபன் ஆகும். அதில் User Name மற்றும் Passowrd கொடுத்து நுழைந்து விடலாம். 
4. அவ்வளவு தான் இனி அந்த கணினி உங்கள் திரையில் ஓபன் ஆகிவிடும். 
5. இதை முழு திரையிலும் Maximize செய்து பார்க்க முடியும். Minimize செய்ய Cursor-ஐ திரையின் மேலே கொண்டு செல்ல வேண்டும். 

Windows 7 & Vista 

Windows 7 & Vista பயனர்கள் இதை செய்வதற்கு Remote Desktop-ஐ ON செய்திருக்க வேண்டும். 

Right Click on My Computer >> Choose “Properties” அதில் Remote Settings என்பதை கிளிக் செய்யவும். இப்போது வரும் விண்டோவில் கீழே உள்ளது போல தெரிவு செய்யவும். 


இப்போது Start Menu-வில் Remote Desktop Connection வசதி வந்து விடும். அதை கிளிக் செய்து நீங்கள் Connect செய்திட இயலும். இதற்கும் மேலே உள்ள வழிமுறை தான். 
இதை அலுவலகம், ப்ரௌசிங் சென்டர் போன்றவற்றில் பயன்படுத்தலாம். வேறு Network அல்லது தொலை தூர கணினிகளுக்கு Team Viewer மூலம் இதை செய்ய முடியும

Notepad ஐ டைரி ஆக்குவது எப்படி ?

டைரி எழுதுவது நம்மில்நிறைய பேருக்கு உள்ள பழக்கம். எந்த நேரமும் கம்ப்யூட்டரில் இருப்பவரா நீங்கள். இப்போ உங்க டைரியையும் கம்ப்யூட்டரில் எழுத முடியும்.
எப்படி என பார்போம் என பார்க்கலாம் வாருங்கள்.
1. open Notepad
2. Type: “.LOG”
3.இதை “Diary” என்ற பெயரில் Save செய்து கொள்ளுங்கள்.
4. இப்போது அதை ஓபன் செய்து பாருங்கள்.
இன்றைய தேதி மற்றும் நேரம் உடன் இருக்கும். டைரி இல்லாத சமயங்களில் கூட இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நிமிடத்துக்கும் கூட நீங்கள் இதை எழுதலாம். அப்பப்போ இதை save செய்ய மறக்காதீர்கள்.

பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க 

 


Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம்.
  • OS cd யை இன்செர்ட் செய்து ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும்.
  • இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும்.
இப்போது கீழே உள்ளது போல டெஸ்க்டாப்பில் வரும்.

  •  இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது.
  • Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம்.
  • இங்கு “taskmgr” என டைப் செய்வதன் மூலம் “task Manager” க்கு வரலாம்.
அது கீழே உள்ளது போல தோன்றும்.
(Processes பகுதி. )

  • இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம்,
  • அதனைRight click  செய்யவும் அதில்  Set priority –>  real time என்பதை தெரிவு செய்யவும்.
அவ்ளோதான்.



0 comments: